×

அதிமுகவுக்கு பருத்திகோட்டை நாட்டார் சங்கம் ஆதரவு: களக்காட்டில் வாழைக்காய் கொள்முதல் நிலையம்; வேட்பாளர் தச்சை கணேசராஜா பேச்சு

நாங்குநேரி: களக்காட்டில் வாழைக்காய் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்று நாங்குநேரி அதிமுக ேவட்பாளர் தச்சை கணேசராஜா உறுதி கூறினார். நாங்குநேரி அதிமுக வேட்பாளர் தச்சை கணேசராஜா, களக்காடு பேரூராட்சிக்குட்பட்ட சிங்கம்பத்து, தம்பி தோப்பு, கருவேலங்குளம், மேலபத்தை, கலுங்கடி, ஊச்சிகுளம், பத்மனேரி, வடமலை சமுத்திரம், திருக்குறுங்குடி பேரூராட்சி, கராந்தானேரி, முனைஞ்சிபட்டி கீரன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் களக்காட்டில் வாழைக்காய் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தார். நாங்குநேரி தொகுதியில் பதநீர் கொள்முதல் நிலையங்களும் தேவையான  இடங்களில் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் விவசாய அணி மாவட்ட செயலாளர் முருகேசன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் பெரியபெருமாள், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் டாக்டர் அருண், மகளிரணி செயலாளர் ஜான்சிராணி, இளைஞரணி இணைச் செயலாளர் குபேந்திரா மணி, ஒன்றிய செயலாளர்கள் பூவரசன், ஜெயராமன், முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், அசோக்குமார், நகர செயலாளர் செல்வராஜ், நிர்வாகிகள் ஐசக் சாலமோன், கடலையார்குளம் தாஸ், வேல்சாமி, செண்பககண்ணு, முத்துகிருஷ்ணன், மகளிரணி மாரியம்மாள், ஐஸ்வர்யா, சீலாபாரதி, புரட்சி பாரதம் நெல்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 இதன் தொடர்ச்சியாக நாங்குநேரியில் தச்சை கணேசராஜாவை பருத்தி கோட்டை நாட்டார் சங்கத்தலைவர் சிதம்பரம் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தமிழகத்தில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த தேவேந்திர குல வேளாளர் கோரிக்கையை நிறைவேற்றிய அதிமுக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.  நாங்குநேரி தொகுதியில் 69 கிராமங்களில் வசித்து வரும் பருத்திக்கோட்டை நாட்டார்கள் இத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தனர். அப்போது அதிமுக முன்னாள் எம்பி சவுந்தரராஜன், பருத்திகோட்டை நாட்டார் சங்கச் செயலாளர் முருகையா, துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியம், சிங்கனேரி ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Supervisory Cotton Natar Association ,Banana Purchasing Centre ,Kalakatta ,Tada Ganesaraja , Cotton Fort Nattar Sangam support for AIADMK: Banana Procurement Station in Kalakkad; Candidate Carpenter Ganesaraja Speech
× RELATED சொல்லிட்டாங்க…