அமைச்சர் விஜயபாஸ்கரை போல் திமுக வேட்பாளர் நடிகர் இல்லை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்

விராலிமலை: தமிழகத்தில் பரப்புரை நிறைவுபெற இன்னமும் 3 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். விராலிமலை தொகுதி திமுக வேட்பாளர் பழனியப்பனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அன்ன வாசலில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் அதிமுக வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கர் மிகப்பெரிய நடிகர் என்கிறார் அவரைப் போல் திமுக வேட்பாளர் நடிகர் இல்லை என்றும் உதயசூரியன் சின்னத்திற்கும் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கோபி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான செங்கோட்டையன் தனது தொகுதிக்குட்பட்ட 42 இடங்களிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் தடையின்றி நாள்தோறும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

Related Stories:

>