'வங்கதேச அகதிகளை காட்டி பா.ஜ.க. அரசியல் ஆதாயம் தேடுகிறது'!: ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ருதீன் அஜ்மல் புகார்..!!

திஸ்பூர்: வங்கதேச அகதிகளை காட்டி பாஜக அரசியல் ஆதாயம் தேடுகிறது என ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ருதீன் அஜ்மல் புகார் தெரிவித்துள்ளார். அசாமில் 2ம் கட்டமாக 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு காலை 11 மணி நிலவரப்படி 27.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பாஜக, அசாம் கணபரிஷப் கட்சி ஓர் அணியாகவும், காங்கிரஸ் - அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஓர் அணியாகவும் போட்டியிருக்கின்றன. ஹோஸை தொகுதியில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ருதீன் அஜ்மல் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வங்கதேசத்தை சேர்ந்த எவரும் திருப்பி அனுப்பப்படவில்லை என்றார். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அரசியல் ஆதாயம் பெறவே வங்கதேச அகதிகளை மையமாக வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதாக அவர் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசியதாவது; வங்கதேச அகதிகளை திருப்பி அனுப்பிவிடுவோம் என்று பிரதமர் மோடியும் அமித்ஷாவும் கூறினர். இதுவரை எத்தனை வங்கதேச அகதிகளை அனுப்பி வைத்தார்கள். கடந்த 5 ஆண்டுகளில் நூறு அகதிகளை கூட அவர்கள் திருப்பி அனுப்பவில்லை என்பதே உண்மை. தேர்தல் ஆதாயம் பெறவே இது பற்றி இருவரும் பேசுகின்றனர் என குறிப்பிட்டார். அசாமில் மொத்தம் உள்ள 146 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் 39 தொகுதிகளில் காலை 11 மணி நிலவரப்படி 27.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குடியுரிமை திருத்த சட்டத்தை செயல்படுத்துவதாக கூறி அசாமில் பரப்புரை செய்து வரும் பாஜக, ஆட்சியை தக்கவைக்குமா என்பது மே 2ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் தெரியவரும்.

Related Stories:

>