முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தால் மக்களுக்கும் போக்குவரத்துக்கும் பாதிப்பு : உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!!

சென்னை : பொதுமக்களையும், போக்குவரத்தையும் தடை செய்யாமல் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டுமென உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தால் மக்களுக்கும் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் எம். ஞானசேகர் தொடர்ந்துள்ள வழக்கில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் பொதுக்கூட்டம் மற்றும் கூட்டங்களுக்கு செல்லும் இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டமும் தடுக்கப்படுவதாக மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றம் ஆகியவற்றில் மக்கள் கூட தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானக்கடை, திரையரங்கம், மால் ஆகியவற்றில் மக்கள் கூடுவருவதாகவும், அதேபோல பிரச்சார கூட்டங்களிலும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் ஒன்றுவதாக மனுவில் கவலை தெரிவித்துள்ளார்.பொதுமக்கள், போக்குவரத்து தடுத்து நிறுத்தாமல் பிரச்சாரங்களை மேற்கொள்ள அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டுமென தலைமை நீதிபதி அமர்வில் வழக்கறிஞர் ஞானசேகர் முறையீடு செய்தார்.அவரது முறையீட்டை ஏற்ற நீதிமன்றம், இன்று மதியம் விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories:

>