நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினியின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள் : மு.க.ஸ்டாலின்

டெல்லி : நடிகர் ரஜினிகாந்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக 51வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். அமிதாபச்சன் ,வினோத் கண்ணா, லதா மங்கேஷ்கர் ,கன்னட நடிகர் ராஜ்குமார், கேரள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோர் தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நிலையில் அந்த வரிசையில் ரஜினியும் இணைந்துள்ளார்.

இதையடுத்து நடிகர் ரஜினி அவர்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார் @rajinikanth-க்கு, #DadasahebPhalkeAward கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது! நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள்!, எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>