“நெருங்கும் தமிழக தேர்தல்; ரஜினிக்கு வீடு தேடி வந்த விருது”... தலைவா என புகழ்ந்த பிரதமர் மோடி..

டெல்லி : நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக 51வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். அமிதாபச்சன் ,வினோத் கண்ணா, லதா மங்கேஷ்கர் ,கன்னட நடிகர் ராஜ்குமார், கேரள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோர் தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நிலையில் அந்த வரிசையில் ரஜினியும் இணைந்துள்ளார்.

இதையடுத்து நடிகர் ரஜினி அவர்களுக்கு முதல்வர் பழனிசாமி, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வித்தியாசமான கதாபாத்திரங்கள், கடின உழைப்பால் உயர்ந்த ரஜினி பல தலைமுறைகளிடம் பிரபலமானவர்.தலைவாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துக்கள, என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>