×

கனடாவில் 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ரா ஜெனிகா கொரோனா தடுப்பூசி போட தடை

ஒட்டாவா: அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை ஐரோப்பிய நாடுகள் தவிர்த்து வரும் நிலையில் உலக சுகாதார நிறுவனம் அதனைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளது. டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து, இத்தாலி, ரோமானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்குப் போடப்பட்ட அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியினால் சிலருக்கு ரத்தம் உறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்தின் தடுப்பூசியை போட்டுக்கொள்ள பல ஐரோப்பிய நாட்டு மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக இந்த நாடுகள் கொரோனா தடுப்பூசி விநியோகத்தைக் குறைத்து வருகின்றன. இதன் பேரில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் முதியவர்களுக்கு அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி போட தடை விதிக்கப்பட்டது. எனினும் ஐரோப்பிய ஒன்றிய மருந்து ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் சில நாடுகளில் மட்டும் தடை விலக்கி கொள்ளப்பட்டது.

இந்நிலையில் 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ரா ஜெனிகா கொரோனா தடுப்பூசி போட வேண்டாம் என்று கனடா நாட்டின் தேசிய நோய் எதிர்ப்பு ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதை ஏற்று கனடாவின் பெரும்பாலான மாகாணங்களில் 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி போட தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Tags : Canada , AstraZeneca, Corona, Vaccine
× RELATED கனடாவில் வெளிநாட்டு மாணவர்கள் வாரத்திற்கு 24 மணி நேரம் பணி செய்ய அனுமதி