×

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா சர்வாதிகார போக்கில் செயல்படுகிறார்!: மாநில அமைச்சர் ஈஸ்வரப்பா ஆளுநரிடம் புகார்..!!

பெங்களூரு: கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா மீது அம்மாநில அமைச்சரே ஆளுநரிடம் ஊழல் புகார் அளித்திருப்பது பாஜகவினரிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் இணைந்து ஆட்சியை அமைத்தது. எடியூரப்பா முதலமைச்சர் ஆனதில் இருந்தே கட்சிக்குள் மோதல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கர்நாடகா ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா, முதலமைச்சர் எடியூரப்பா மீது நேரடியாக ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம் ஊழல் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், முதல்மந்திரி எடியூரப்பா நிதித்துறையை கவனித்து வருகிறார். தமது கட்டுப்பாட்டில் உள்ள துறைக்கு தமக்கு தெரியாமலேயே 77 கோடி ரூபாயை முதலமைச்சர் எடியூரப்பா வழங்க ஒப்புதல் அளித்திருப்பதாக அதில் ஈஸ்வரப்பா குற்றம்சாட்டியுள்ளார். தமது துறையில் முதலமைச்சர் எடியூரப்பா, தேவையில்லாமல் தலையிடுகிறார், இது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது சம்பந்தப்பட்ட துறை மந்திரியான என்னை முற்றிலுமாக புறக்கணித்துள்ளார் என்று ஆளுநருக்கும் பாரதிய ஜனதா தலைமைக்கும் ஈஸ்வரப்பா கடிதமும் எழுதியிருக்கிறார்.

நிதிஒதுக்கீடு செய்வதியில் எடியூரப்பா உறவினர்களுக்கு சாதகமாக செயல்படுவதாகவும், மேலும் முதல்வர் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கும் ஈஸ்வரப்பா எடியூரப்பா கடிதம் அனுப்பியிருக்கிறார். சர்வாதிகார போக்கில் செயல்படுவதாகவும் அவர் புகார் அளித்திருக்கிறார். ஈஸ்வரப்பாவின் இந்த குற்றச்சாட்டால் பாஜக-வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் கர்நாடகா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Chief Minister ,Karnataka ,Eduuruba ,State Minister ,Ieswarpa ,Governor , Karnataka Chief Minister Eduyurappa, dictatorial trend, Minister of State Easwarappa
× RELATED ஆளுநர் பதவியை விட சுயமரியாதையே...