×

மேற்கு வங்கம், அசாம் சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

கொல்கத்தா: மேற்கு வங்கம், அசாம் சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த சுவேந்து அதிகாரியை எதிர்த்து முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இரண்டாம் கட்டமாக மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும் அசாமில் 39 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில் இன்று 2வது கட்ட தேர்தலானது நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெறும். சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மிகவும் முக்கியமான நந்திகிராம் தொகுதியில் இன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற கூடிய சூழ்நிலையில் தொகுதி முழுவதும் 144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் பதற்றம் நிறைந்த சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் ஊரடங்கு உத்தரவு என்பதும் போடப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 800 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அசாம் மாநிலத்தை பொறுத்தவரை 39 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. அசாம் மாநிலத்தில் 39 தொகுதிகளில் 26 பெண்கள் உள்பட 245 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Tags : Assam ,West Bank , Polling, West Bengal, Assam
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...