எழும்பூர் தொகுதியில் ஜான்பாண்டியன் பைக் பேரணி

சென்னை: தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன் ஆதரித்து நேற்று புளியந்தோப்பு நெடுஞ்சாலை அரி மருத்துவமனை, மோதிலால் சாலை, டி.கே.முதலி தெரு, வி.வி.கோயில் தெரு, அங்காளம்மன் கோயில் தெரு, ஏபி சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, வடமலை பிள்ளை தெரு, அருணாசலம் பண்டாரம் தெரு, வெங்கடேச நாயக்கர் தெரு, தானா தெரு, தானா தெரு இடதுபுறம், புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சங்கம் திரையரங்கம் மேம்பாலம் வழி, சேத்துப்பட்டு சத்தியமூர்த்தி சாலை, அம்பேத்கர் திடல், மாணிக்கவாசகர் சாலை, பள்ளிக்கூட சாலை, மெக்னிக்கல் சாலை, ஸ்பார்டாங் சாலை, எழும்பூர் நெடுஞ்சாலை, ஆல்பர்ட் திரையரங்கம் வழி, எல்.பி சாலை காவல்துறை குடியிருப்பு ஆகிய பகுதிகளில்a  பெண்கள் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று  வீடு வீடாக  இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குசேகரித்தனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள சாலையோர கடைகள், தள்ளுவண்டி, கடை வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன் கூறுகையில், “இந்த தொகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. தெருக்களில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இவைகள் எல்லாம் வெற்றிபெற்ற உடன் சரி செய்யப்படும். இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக குடியிருந்து வருகிறார்கள். அந்த குடியிருப்புக்கு பட்டா பெற்று கொடுப்பேன். அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் தொகுதி மக்களுக்கு பெற்றுக்கொடுப்பேன்,” என வாக்குறுதியளித்தார்.

Related Stories:

>