×

கிராமப்புற அரசுப் பள்ளிகள் மேம்படுத்தப்படும்: அமமுக வேட்பாளர் வாக்குறுதி

காஞ்சிபுரம்: உத்திரமேரூர்  கிழக்கு ஒன்றியப் பகுதிகளில் உத்திரமேரூர் தொகுதி அமமுக வேட்பாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் குக்கர் சின்னத்துக்கு வீதிவீதியாக நடந்துசென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட கிழக்கு ஒன்றியத்தின் ஒரக்காட்டுப்பேட்டை, காவூர், காவித்தண்டலம், திருவானைக்கோயில், மிளகர்மேனி, சாத்தனஞ்சேர், குருமஞ்சேரி, சீத்தனஞ்சேரி, சீத்தாவரம், அரும்புலியூர், எடமிச்சி, பொற்பந்தல், சித்தனக்காவூர், ஆலப்பாக்கம், மாம்பாக்கம், சிறுபினாயூர், சாலவாக்கம் உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதீவீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர், பேசியதாவது.

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் பாலாற்றில் கூடுதல் தடுப்பணைகதள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தை, விவசாயிகளின் மேம்பாட்டிற்கான திட்டங்கள் கொண்டுவரப்படும். கிராமப்புற அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கிராம அளவில் விவசாயிகள், கல்வியாளர்கள், மூத்த குடிமக்களை உள்ளடக்கிய குழுவை உருவாக்கி கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். கிராமச் சாலைகள் அனைத்தும் தரமான சாலைகளாக மாற்றப்படும் என தெரிவித்தார். எனவே, அமமுக வேட்பாளராக போட்டியிடும் எனக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச்செய்ய வேண்டுகிறேன் என்றார்.

அதில், ஒன்றிய செயலாளர்கள்.தம்மனூர் தாஸ், வேளியூர் தனசேகரன், கூரம் பச்சையப்பன்,  உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆலஞ்சேரி கமலக்கண்ணன், வாலாஜாபாத் பேரூராட்சி செயலாளர் சந்தீப், உத்திரமேரூர் மேற்கு செயலாளர் பாபு, உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ், தேவராஜ், பேரூராட்சி செயலாளர் கார்த்திக், மாவட்ட மகளிரணி வரலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் மாதவன் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராதாகிருஷ்ணன், தேமுதிக.மாவட்ட துணை செயலாளர் அருண்குமார், காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளர்கள் காலூர் என்.எஸ் நந்தகுமார், விப்பேடு கிருபாகரன், வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர்கள் பொன்னுரங்கம்,

ராமலிங்கம், உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் அழிசூர் கன்னியப்பன், நகர செயலாளர் சந்திரமௌலி, ஒன்றிய அவைத்தலைவர் உமாபதி , வாலாஜாபாத் பேரூர் செயலாளர் பழனிவேல்ராஜ், கிளை செயலாளர் பாபு, எஸ்டிபிஐ தமிமுன் அன்சாரி மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Aam Aadmi Party , Rural government schools will be upgraded: Aam Aadmi Party candidate promises
× RELATED டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு...