வித்யாசாகர் குளோபல் பள்ளியில் பட்டமளிப்பு விழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது. செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழா மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சிறப்பிக்கும் வகையில், பரிசளிப்பு  விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. வித்யாசாகர் கல்வி குழுமத்தின் உறுப்பினர் சினேகலதா சுரானா தலைமை வகித்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வித்யாசாகர் கல்வி குழுமத்தின் பொருளாளர் சுரேஷ் கன்காரியா, தாளாளர்  விகாஸ் சுரானா, இயக்குனர் பி.ஜி.ஆச்சார்யா, பள்ளி முதல்வர் டாக்டர் வி.சி.கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவன் சுனில் பிரகாஷ் வரவேற்றார். இதில், சிறப்பு விருந்தினராக வித்யாசாகர் கல்விக்குழும உறுப்பினர் சினேகலதா சுரானா, கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி  விழாவை துவக்கி வைத்தார். பின்னர், வித்யாசாகர் கல்விக் குழும உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினரை கௌரவித்தனர். தொடர்ந்து,  வகுப்பு ஆசிரியர்கள், தங்களது மாணவர்களின் தனித்திறமைகளை எடுத்து கூறி பாராட்டினர். மாணவ, மாணவிகள் தங்கள் வகுப்பு அனுபவங்கள், ஆசிரியர்களின் அணுகுமுறைகளை பகிர்ந்துக் கொண்டனர்.

இதையடுத்து 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்களையும், பாடவாரியாக முதலிடம் பெற்றவர்களையும் ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு பரிசுகளை வழங்கிய சிறப்பு விருந்தினர், தம் உரையில் மாணவர்களையும், ஆசிரியர்களையும் பாராட்டினார். விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில், மாணவன் வட்சராஜன் நன்றி கூறினார்.

Related Stories:

>