×

வந்தாச்சி ஐபிஎல்

* கேப்டன்கள் அணியின் கேப்டனாகி இருக்கிறார் ரிஷப் பண்ட்.  டெல்லி கேபிடல்ஸ் அணியில் உள்ள ஆர்.அஷ்வின், அஜிங்கிய ரகானே, ஸ்டீவன் ஸ்மித், ஷிகர் தவான் ஆகியோர் ஏற்கனவே ஐபிஎல் அணிகளின் கேப்டன்களாக இருந்தவர்கள்.  கிங்ஸ் லெவன்  பஞ்சாப் அணியின்  கேப்டனாக அஷ்வினும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக ஷிகர் தவானும் இருந்துள்ளனர். அதேபோல் ரகானே, ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர்  ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் கேப்டனாக இருந்திருக்கிறார்கள். இதில் ஸ்மித் 3வது அணியாக புனே வாரியர்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்திருக்கிறார். கூடவே டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக இருந்தவர்.

* சமூக ஊடகத்தில் உரையாடிய சன்ரைசர்ஸ் வீரர் ஜானி பேர்ஸ்டோவிடம், ‘ஐதராபாத் பிரியாணியா? இனிப்பா? எது பிடிக்கும் என்ற கேள்விக்கு, ‘ஐதராபாத் இனிப்புகளுக்குதான் முதலிடம்’ என்று கூறியுள்ளார்.

* கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் நடிகர் ஷாருக்கான் சமூக ஊடகமொன்றில் ரசிகர்களிடம் நேற்று உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் ‘கொல்கத்தா கோப்பையை வெல்லுமா? வெல்லாதா? என்று கேட்டார். அதற்கு ஷாருக்கான், ‘நான் நம்புகிறேன்... அந்த கோப்பையில் மட்டுமே இனி காபி குடிக்க விரும்புகிறேன்’ என்று ஜாலியாக பதில் அளித்தார்.

* இந்திய டெஸ்ட் அணியின் இரும்புச் சுவராக இருப்பவர் சித்தேஷ்வர் புஜாரா. ஆனால் அவருக்கு 2014ம் ஆண்டுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பே கிடைக்கவில்லை. ஆஸ்திரேலியா தொடருக்கு பிறகு எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தார் புஜாரா. பலன்  அவரை  அடிப்படை விலையான 50லட்ச ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலம் எடுத்தது. அதனால் மும்பை முகாமில் புஜாரா தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.  ஆனால் அவருக்கு ஆடும் அணியில் இடம் கிடைக்குமா என்பதை டோனிதான் சொல்ல வேண்டும்.

* சென்னை அணி விடுவித்த  சுழல் ஹர்பஜன்சிங் இப்போது கொல்கத்தா அணியில் இணைந்துள்ளார். ‘அவர் அணியில் இணைந்திருப்பதால் எங்களின் சுழல் பலம் அதிகரித்துள்ளது’ என்று கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார். காயம் காரணமாக இந்தியா-இங்கிலாந்து தொடரில் இருந்து விலகிய மோர்கன் இப்போது கொல்கத்தா அணியுடன் இணைந்து உள்ளார்.

* சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் மிட்செல் மார்ஷ் (ஆஸ்திரேலியா) சொந்த காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.  போன 2020 தொடரில் 4 பந்துகளை மட்டும் வீசிய மார்ஷ் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் மார்ஷ்க்கு பதிலாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் அணியில் சேர்க்கப்படுகிறார்.

Tags : IPL , IPL
× RELATED கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் திருவிழா