பிரசாரத்தில் கூட்டத்தை சேர்க்க கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு குவாட்டர்: புலம்பும் இலைகட்சி வேட்பாளர்

நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர் என 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாகை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தங்க.கதிரவன், தனது ஆதரவாளர்களுடன் தொகுதி முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரம் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுகவினர் மட்டுமல்லாமல் கூட்டணி கட்சியினரின் வருகை நாளுக்கு நாள் குறைய தொடங்கியதாம். இதை அறிந்த வேட்பாளர் தங்க.கதிரவன், பிரசாரத்திற்கு கூட்டணி கட்சி தொண்டர்களை வரவழைக்க அவர்களுக்கு 300 ரூபாயும், குவாட்டாரும் வாங்கி கொடுக்க முடிவு செய்தாராம்.. பிரசாரத்திற்கு வரும் தொண்டர்களுக்கு நாள் ஒன்றுக்கு 300 ரூபாயும், சரக்கும் வாங்கி கொடுக்கிறாராம்.

தினமும் பணமும், சரக்கும் வாங்கி கொடுத்து தான் கூட்டத்தை சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோமே என ஆதரவாளர்களிடம் தங்க.கதிரவன் புலம்பியவாறு ஓட்டு கேட்டு வருகிறாராம். பிரசாரம் தொடங்குவதற்கு முன் கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு சரக்கு கொடுப்பதும், அதை வாங்கும் தொண்டர்கள் சரக்கை மறைத்து வைத்து மற்றவர்களுக்கு விநியோகம் செய்வதையும் சிலர் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது நாகை தொகுதியில் வைரலாகி வருகிறது.

Related Stories:

>