×

தமிழகத்தில் வெயில் 108 டிகிரியை தாண்டும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக, ஏப்ரல் 3ம் தேதி வரை இயல்பை விட 20 மாவட்டங்களில் வெயில் அதிகரித்து, 108 டிகிரியை தாண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருத்தணி, வேலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக 106 டிகிரி வெயில் கொளுத்தியது. இதன் தொடர்ச்சியாக, வரும் ஏப்ரல் 3ம் தேதி வரை வறண்ட வானிலை தமிழகம் புதுச்சேரியில் நீடிக்கும். இதனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடு துறை ஆகிய 20 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயல்பைவிட கூடுதலாக 2 அல்லது 3 டிகிரி வெயில் அதிகரிக்கும்.


Tags : Tamil Nadu ,Meteorological Center , Sun exceeds 108 degrees in Tamil Nadu: Meteorological Department warns
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு...