கேரளாவில் பிரசாரத்தின் போது பரபரப்பு; பெண் வேட்பாளர் வீட்டுக்கு திடீரென சென்ற பிரியங்கா: வீடு பூட்டி இருந்ததால் வராண்டாவில் காத்திருந்தார்

திருவனந்தபுரம்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, 2 நாள் தேர்தல் பிரசார பயணமாக நேற்று முன்தினம் கேரளா வந்தார். ஆலப்புழா மாவட்டம், காயங்குளம் தொகுதி வேட்பாளர் அரிதா பாபுவை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது திடீரென அரிதாவிடம், ‘வீட்டிற்கு எவ்வளவு தூரம்?’ என்று பிரியங்கா கேட்டார். அவரும், ‘2 கிமீ தூரத்தில் உள்ளது,’ என்றார். உடனே, வாகனத்தை அரிதாவின் வீட்டுக்கு திருப்பும்படி பிரியங்கா உத்தரவிட்டார். அரிதாவின் வீட்டுக்கு பிரியங்கா சென்றபோது, வீடு பூட்டப்பட்டு இருந்தது. அரிதாவின்பெற்றோருக்கு பிரியங்கா காத்திருக்கும் தகவல் கொடுக்கப்பட்டதும், பதறியடித்து கொண்டு வந்தனர்.

அதுவரையில், அந்த வீட்டின் வராண்டாவில் அமர்ந்து பிரியங்கா கா்த்திருந்தார். அரிதாவின் பெற்றோர் பிரியங்காவை பார்த்ததும் ஆனந்த கண்ணீர் வடித்தனர். அவர்களிடம், ‘உங்கள் மகளை பற்றி நீங்கள் பெருமைப்படலாம்,’ என்று பிரியங்கா கூறினார். மேலும், தன்னை பார்க்க குவிந்த அப்பகுதி மக்களுடன்  பிரியங்கா சளைக்காமல் செல்பிக்கு போஸ் கொடுத்தார்.

Related Stories:

>