×

அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கும் பெண்கள்: நீதிபதி புகழாரம்

கோலார்: பெண்கள் தற்போது அனைத்து துறையிலும் சாதனைப்படைத்து வருகின்றனர் என்று நீதிபதி ஏ.சி. தயானந்தமூர்த்தி தெரிவித்தார். கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் சங்கம் சார்பாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீதிபதி தயானந்தமூர்த்தி பேசியதாவது, ``தற்போது பெண்கள் அனைத்து துறையிலும் சாதனைப்படைத்து வருகின்றனர். உதாரணத்துக்கு டாக்டர், இன்ஜினியர், விஞ்ஞானி, அரசியல் ஆகியவற்றில் பெண்களின் பங்களிப்பு அதிகமாகவுள்ளது. அதே போல் நமது நாட்டில் பெண்களுக்கு தனி மரியாதை உள்ளது. அவர்களை தாயாகவும், தெய்வமாகவும் பார்கின்றனர். அதே போல் நீதிபதி பார்வதி தற்போது தந்தை, தாய், ஆசிரியர்கள், கன்னடா மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஏன் என்றால் அவர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கடுமையான முயற்சியில் கஷ்டப்பட்டு படித்து தற்போது நீதிபதியாக வளர்ச்சியடைந்துள்ளார். இது பெருமையான விஷயம். இவருக்கு கடவுள் நல்ல ஆரோக்கியம் கொடுத்து ஏழை மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுப்பதில் சிறப்பாக செயல்பட வேண்டும்’’ என்றார்.
 இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீதிபதி பி.சி. திபு பேசியதாவது, ``நீதிபதி பார்வதி கஷ்டப்பட்டு படித்து இந்த அளவுக்கு உயர்ந்துள்ளார். இதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.  அதே போல் அவரால் கன்னடா மண்ணுக்கு பெருமை கிடைத்துள்ளது. அவர் இன்னும் பல சாதனைகள் படைத்து ஏழை மக்களுக்கு நீதி கிடைக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.

Tags : Women of Achievement in All Fields: Judge Praise
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...