×

கொரோனா மையத்தில் ‘சரக்கு பார்ட்டி’.... மும்பையில் ஊழியர் சஸ்பெண்ட்

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகின்றன. மாநிலம் முழுவதும் இரவுநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மும்பை புறநகரான கல்யாண்-டோம்பிவலி பகுதியில் இருந்து ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் கல்யாண்-டோம்பிவலி பகுதியில் செயல்பட்டு வரும் கொரோனா மருத்துவ மையத்தில் பணியாற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் சிலர் சந்தோசமாக மது அருந்தும் காட்சி இருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கல்யாண்-டோம்பிவலி மாநகராட்சி சுகாதாரத் துறை,  மேற்கண்ட சம்பவத்தில் தொடர்புடைய ஊழியர்களை உடனடியாக இடைநீக்கம் செய்தனர். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்கக் கூடாது என்று மற்ற ஊழியர்களிடம் எச்சரித்துவிட்டு சென்றனர். கொரோனா மைய இயக்குனர் டாக்டர் ராகுல் குலாம் கூறுகையில், ‘வீடியோவில் இருக்கும் ஊழியர் வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர்களுடன் மது அருந்தியவர்கள் மருத்துவமனை ஊழியர்கள் அல்ல. அவர்கள் வெளியிலிருந்து நோயாளிகளை பார்க்க வந்தார்கள். அவர்களும் வெளியேற்றப்பட்டனர்’ என்றனர்.

Tags : Corona Center ,Mumbai , ‘Freight Party’ at Corona Center .... Employee Suspended in Mumbai
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...