மாலை அணிவிக்க மறந்த கோயில் குருக்களை தாக்க முயன்ற அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ: அதிமுகவினர் விரக்த்தி

சென்னை: சென்னை பல்லாவரத்தில் கோவில் வழிபாட்டின் போது மாலை அணிவிக்க மறந்த கோவில் குருக்களை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தன்சிங் தக்க முயன்றதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் போட்டியிடுகிறார். வழக்கமாக அவர் வாக்கு சேகரிக்க செல்வதற்கு முன்பாக கோவில்களில் வழிபட்டு செல்வது வழக்கம்.

அதே போல் இன்று பல்லாவரம் ஸ்ரீதேவி கங்கை அமரன் கோவிலில் வழிபாடு செய்வதற்காக முன்னாள் எம்.எல்.ஏ.தன்சிங், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிநிர்வாகிகளுடன் சென்றிருந்தார். அப்போது கோவில் அர்ச்சகர் வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனுக்கு  புராணக்கும்மா மரியாதையை அளித்தார். பின்னர் சற்று கவன குறைவுடன் மாலை அணிவிக்க மறந்து சென்ற நிலையில் ஆத்திரமடைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தன்சிங் கோவில் குருக்களை பார்த்து ஒருமையில் பேசியதுடன் அவரை தாக்க முற்பட்டார்.

இதனை பார்த்த பல்லாவரம் வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனுக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் சமூகமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கோவில் அர்ச்சகரை தாக்க முயன்றது அவர் மாலை அணிவிக்க மறந்ததர்க்காகவா அல்லது அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற விரக்கத்தியை வெளிப்படுத்தும் வகையில் இது போல நடந்து கொண்டாரா என்று தற்போது அதிமுகவினர் இடையே தற்போது கிசுகிசு பரவி வருகிறது.

கோவில் வழிபாட்டு தளத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இதுபோல அநாகரிகமாக நடந்து கொண்டது அதிமுக கூட்டணி கட்சியினர் இடையே ஒருவித சலசலப்பை ஏற்படுத்துள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங் பல்லாவரம் தொகுதியில் தனக்குத்தான் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பாத்திருந்தார். ஆனால் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கள்  ராஜேந்திரனுக்கு அதிமுக தலைமை சீட் கொடுத்தது, இதனால் அவர் அதிர்ப்தியில் இருந்தது உண்மைதான். அந்த அதிருப்தியை வெளிகாட்டும் விதமாக இந்த சம்பவம் நடந்திருப்பதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>