×

கொரோனா பாதிக்கும் முக்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: கொரோனா பாதிக்கும் முக்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். தமிழகத்தில் தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்வதால் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். கிண்டியில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் தற்போது 1,124 கொரோனா நோயாளிகள் இருக்கிறார்கள். மொத்த படுக்கைகள் 4,368 ஆக உள்ளது என கூறினார். சென்னையில் கொரோனா பாதிப்பு 3 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது நான்கரை சதவீதமாக உயர்ந்துள்ளது. 600க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன என தகவல் தெரிவித்தார்.

தமிழகத்தில் 29.5 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், 10 லட்சத்து 40 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் 2 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள் 2ம் தேதி வர உள்ளன என கூறினார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா சிகிச்சைப் பிரிவுகள் போதிய படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர் வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன. பள்ளி, கல்லூரிகளிலும் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என கூறினார்.


Tags : Tamil Nadu ,Health ,Radakrishnan , Corona, States, Tamil Nadu, No, Radhakrishnan
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...