பாஜக, அதிமுக கூட்டணிக்கு பெண்கள் பாதுகாப்பே முக்கிய நோக்கம் : கோவையில் யோகி ஆதித்யநாத் வாக்கு சேகரிப்பு!!

லக்னோ : அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தமிழகத்தில் இருந்து ரூ.120 கோடி நிதி வந்துள்ளது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள கொள்ள கோவை வந்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், புலியகுளம் விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது வேட்பாளர் வானதி சீனிவாசன் உடன் இருந்தார்.பின்னர் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய  பேசிய யோகி,  பிரதமர் மோடியின் பார்வை முழுவதும் தமிழகம் பக்கமே உள்ளது.

தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் மத்திய அரசின் நிதி இன்னும் அதிகளவில் கிடைக்கும். அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றும். தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்து அக்கறை இல்லை. ஆனால் பாஜக - அதிமுக கூட்டணிக்கு பெண்கள் பாதுகாப்பே முக்கியம். என்றார். முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட தமிழக பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரதமர் மோடி நேற்று தாராபுரத்தில் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More