×

வன்னியர் ஒதுக்கீட்டில் பல்டி அடித்த ஓபிஎஸ் : அவருக்கு தென் மாவட்டங்களின் கவலை என ப.சிதம்பரம் கிண்டல்

சென்னை : வன்னியர் சமூகத்தினருக்கான 10.5% உள் ஒதுக்கீடு தற்காலிகமானது என்று துணை முதல்வரும் நிரந்தரமானது என்று சட்ட அமைச்சரும் கூறி வரும் நிலையில், முதல்வர் பழனிசாமி என்ன சொல்ல போகிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். தனியார் நாளிதழுக்கு சமீபத்தில் பெட்டி அளித்த துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீடு தற்காலிகமான ஏற்பாடு தான் என்று கூறியிருந்தார். ஆனால் சட்ட அமைச்சர் சண்முகமோ, வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு நிரந்தரமான ஒன்றுதான் என்று கூறி இருந்தார்.

துணை முதல்வரும் வருவாய் துறை அமைச்சருமான உதயக்குமார் உள் ஒதுக்கீடு தற்காலிகம் தான் என்றும் சட்ட அமைச்சர் நிரந்தரமானது தான் என்றும் கூறி இருப்பது வன்னியர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் 10.5% உள் ஒதுக்கீடு தற்காலிகம் தான் என்று துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கூறி இருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக் காட்டி இருக்கும் ப. சிதம்பரம் அவருக்கு தென் மாவட்டங்கள் பற்றிய கவலை என்று விமர்சித்துள்ளார்.

ஆனால் 10.5% உள் ஒதுக்கீடு நிரந்தரமானது என்று சட்ட அமைச்சர் கூறுவதை அடிக்கோடிட்டு காட்டி உள்ள ப.சிதம்பரம் அவருடைய கவலை அவருக்கு என்று குறிப்பிட்டுள்ளார். இதே நேரத்தில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு குறித்து முதல்வர் என்ன சொல்ல போகிறார் என்றும் ப.சிதம்பரம் வினா எழுப்பியுள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக ஒதுக்கீடு என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாத பாஜக என்ன சொல்ல போகிறது என்றும் ட்விட்டரில் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : P. Chidambaram , ப.சிதம்பரம்
× RELATED பாஜ தலைவர்கள் கண் மருத்துவரை பார்க்க வேண்டும்: ப.சிதம்பரம் விமர்சனம்