இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு நலமாக உள்ளார்; விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்: டீன் தகவல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தலைவருமான நல்லக்கண்ணு கொரோனா தொற்று காராணமாக நேற்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் கொரோனா தொற்று பாதித்த நல்லகண்ணுவுக்கு நுரையீரலில் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்திருந்தனர். வயது மூப்பு காரணமாக இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. அவருக்கு காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று உறுதியானது கண்டறியப்பட்டது.

அவருக்கு நுரையீரலில் 15 சதவீதம் தொற்று பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவமனை டீன் தேரணிராஜன் மற்றும் டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். குறைந்த அளவு தொற்று இருப்பதால் அவரது உடல் நலம் நன்றாக உள்ளது என ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் தேரணிராஜன் கூறினார். தொடர் மருத்துவ சிகிச்சை கண்காணிப்பில் அவர் இருந்து வருகிறார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளது எனவும், அவர் விரைவில் டிஸ்ஜார்ஜ்  செய்து வீடு திரும்புவார் என கூறினார்.

Related Stories:

>