ராகுல் குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்டார் கேரள மாஜி எம்பி

திருவனந்தபுரம்:கேரளாவில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இடுக்கி மாவட்டம், உடும்பன்சோலை தொகுதியில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் சார்பில் அமைச்சர் எம்.எம்.மணி போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் இத்தொகுதிக்கு உட்பட்ட இரட்டையார் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் முன்னாள் எம்பி ஜோய்ஸ் ஜார்ஜ், ‘ராகுல் காந்தி மகளிர் கல்லூரிகளுக்கு மட்டும்தான் செல்வார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. எனவே, மாணவிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவரை நம்ப முடியாது. குழப்பக்காரர்,’ என்றார். அவருடைய இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முதல்வர் பினராய் விஜயனும் கண்டனம் தெரிவித்தார். ஜோய்சை கைது செய்யக்கோரி திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் முன் மகளிர் காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில், தனது பேச்சுக்காக ஜோய்ஸ் ஜார்ஜ் நேற்று பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். இடுக்கியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ‘‘நான் ராகுல் குறித்து பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்,’’ என்றார்.

Related Stories:

>