×

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மெகபூபாவின் தாய்க்கும் பாஸ்போர்ட் நிராகரிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். போலீசார் அறிக்கையின் அடிப்படையில், அவருடைய விண்ணப்பத்தை பாஸ்போர்ட் அதிகாரிகள் நேற்று முன்தினம் நிராகரித்து விட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், மெகபூபாவின் தாயார் குல்சான் நசிரின் பாஸ்போர்ட் விண்ணப்பமும் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெகபூபா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘70 வயதாகும் எனது தாயார் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அதனால் பாஸ்போர்ட் வழங்க முடியாது என்றும் போலீசார் அறிக்கை அளித்துள்ளனர். மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படாத என்னை துன்புறுத்தவும், தண்டிக்கவும் இதுபோன்ற அற்பமான முறைகள் பயன்படுத்தப்படுகிறது,’ என கூறியுள்ளார். குல்சானின் கணவரும், மெகபூபாவின் தந்தையுமான முப்தி முகமது சயீத், 1990ம் ஆண்டுகளில் மத்திய அமைச்சராக இருந்தவர். மேலும், ஜம்மு காஷ்மீரின் முதல்வராக 2 முறை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Mehbooba , Passport rejection for Mehbooba's mother as a threat to the country's security
× RELATED ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் கார் விபத்து..!!