×

வந்தாச்சி ஐபிஎல்...

*  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின்  பெயர் இப்போது பஞ்சாப் கிங்ஸ் என்று மாற்றப்பட்டுள்ளது. கூடவே சென்னை, மும்பை அணிகளை போல்  பஞ்சாப் அணியும் புதிய  சீருடையை நேற்று அறிமுகபடுத்தியது. அதே சிவப்பு வண்ணத்தில், வெள்ளைக்கு பதிலாக தங்க நிறம் இடம் பிடித்துள்ளது. ஹெல்மட்டும் இனி தங்கநிறத்தில் மின்ன உள்ளது.
* தமிழ்நாட்டு புது மாப்பிள்ளை ஜஸ்பிரீத் பும்ரா திருமணத்திற்கு  பிறகு ஐபிஎல் தொடரில் விளையாட சென்னை வந்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் வீரரான பும்ரா,  நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அங்கு உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ்ப்பெண் சஞ்சனா கணேசனை மார்ச் 15ம் தேதி திருமணம் செய்வதற்காக  இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து விலகினார் பும்ரா.
* ஐபில் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் ஏப்.9ம் தேதி களம் காணுகின்றன. அதனால் பெங்களூர் அணி வீரர்கள்  சிராஜ், சாஹல், சைனி உட்பட 11பேர்  சென்னையில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.  
கேப்டன் விராத் கோஹ்லி உள்ளிட்ட மற்ற வீரர்கள் நாளை சென்னை வருகின்றனர்.
* ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக  பென் ஸ்டோக்ஸ்(இங்கிலாந்து)  அட்டகாசமாக ஆரம்பிப்பார், நான் அசத்தலாக முடிப்பேன்’ என்று கிறிஸ் மோரிஸ்(தென் ஆப்ரிக்கா) நம்பிக்கை தெரிவித்துள்ளார். நடப்புத் தொடரில் மோரிஸ்தான் அதிகபட்சமாக 16.25கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவர்தான் அந்த அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பில் உள்ளார்.
* டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது காயம் காரணமாக விலகினார். அறுவை சிகிச்சை, தொடர் ஓய்வு காரணமாக ஐபிஎல் தொடரிலும் விளையாடும் வாய்ப்பு குறைவு. அதனால் டெல்லி அணியின் ரிஷப், அஷ்வின், ரகானே ஆகியோரில் ஒருவர் கேப்டனாகும் வாய்ப்பு உள்ளது.



Tags : IPL , The name of the Kings XI Punjab team has now been changed to Punjab Kings
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி