×

ஆதிதிராவிட பெண்களை இழிவாக பேசிய பாஜ நிர்வாகி: மதுராந்தகம் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

சென்னை: மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினராக 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இருந்தவர் காயத்ரிதேவி. அப்போது, திமுக கூட்டணியில் மதுராந்தகம் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதால், அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றவர்.  இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜவில் இணைந்துள்ளார். அப்போது, கட்சி சார்பில் அவருக்கு முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. பாஜவில் புதிதாக இணைந்த அவருக்கு பாஜ மாநில மகளிர் அணி துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும், பாஜ மாநில மகளிர் அணி துணை செயலாளருமான காயத்திரி தேவி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர் ஆதிதிராவிட பெண்களையும், சமூகத்தையும் இழிவாகப் பேசியதாக கூறப்படுகிறது. எனவே, அவரை கண்டித்து நேற்று பொலம்பாக்கம் கிராமத்தினர் மற்றும் ஆதிதிராவிட கூட்டமைப்பு சார்பில் பொலம்பாக்கத்தில் கல்லூரி எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காயத்ரி தேவியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென மதுராந்தகம் சூனாம்பேடு நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது, போராட்டக்காரர்களிடம் சமரசம் பேசிய போலீசார், ‘முன்னாள் எம்எல்ஏ மீது சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதி அளித்ததன்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : adhira ,Madurandam , BJP executive speaks disparagingly of Adithra women: Public road blockade near Madurantakam
× RELATED மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதியதில் ஒருவர் பலி