அடிக்கல் நாயகன் பழனிசாமி செங்கல்லை மட்டுமே எடுத்து வைப்பார்: கனிமொழி குற்றச்சாட்டு

சென்னை: மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை த.ேவலுவை ஆதரித்து பல்லக்கு மாநகர் பகுதியில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: அதமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் சாலை ஏதும் போடப்படவில்லை. எட்டு வழிச்சாலை மட்டும் முதல்வர் பழனிசாமி போடுவார். அதில்தான் கொள்ளையடிக்க முடியும். அடிக்கல் நாயகன் பழனிசாமி, செங்கலை மட்டுமே எடுத்து வைப்பார், அடுத்து எதுவும் செய்வதில்லை.  தமிழகத்தை டெல்லியில் அடகு வைத்து விட்டனர். நம் வீட்டு பிள்ளைகள் படிக்க கூடாது என்று நீட் தேர்வை கொண்டு வந்தார்கள். தற்போது, புதிய கல்விக் கொள்கையை கொண்டு வரப்போகிறார்கள். அதிமுக ஆட்சியில் இருந்தால் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்காது.

கடந்த முறை அதிமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை கூட நிறைவேற்ற வில்லை. மக்களை ஏமாற்றி பதவியில், ஆட்சியில் இருந்து விடலாம் என்று அதிமுக நினைக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் எல்லாம் தாக்கப்படுகிறார்கள். சிலிண்டர், வாஷிங் மிஷின் வரும் என்று சொல்வார்கள். ஆனால் வராது. ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று தெரிந்து இப்படிப்பட்ட வாக்குறுதிகளை சொல்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>