எழும்பூர் தொகுதியில் 6 குறைதீர் மையம்: பரந்தாமன் வாக்குறுதி

சென்னை: எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் பரந்தாமன், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி, நேற்று காலை புளியந்தோப்பு 77வது வட்டத்தில் பி.கே.காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்தனர்.  அதற்கு வேட்பாளர், கண்டிப்பாக செய்வேன். தொகுதி முழுவதும் மக்களின் குறை தீர்க்க எம்எல்ஏ அலுவலகம் போன்று 6 மையங்கள் அமைக்க உள்ளேன். அதில் ஆட்கள் இருப்பார்கள், அவர்களிடம் உங்கள் குறைகளை தெரிவித்தால் அதனை மனுவாக தயார் செய்து, உடனடியாக யாரை அனுக வேண்டுமோ, அவர்களை தொடர்புகொண்டு தீர்த்து வைப்பேன், என்றார். தொடர்ந்து கூட்டணி கட்சியினர் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தில் பரந்தாமன் பேசுகையில், ‘எழும்பூர் தொகுதியில் குடிசை பகுதியில்  உள்ள மக்கள் வீடு, நல்ல குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். பொருளாதாரத்தில்  வளர்ந்த மக்களை சந்திக்கும் போது, அவர்கள் மோடி அரசு ஜி.எஸ்.டி கொண்டு  வந்ததால், தொழிலில் நஷ்டம், வருமானம் குறைந்து நஷ்டத்தில்  பாதிக்கப்பட்டுள்ளோம் என்கின்றனர். அதிமுக அரசின் ஆட்சி  வேண்டாம், திமுக வெற்றி பெற்று எங்களுக்கு நல்லது செய்ய வேண்டும். இதேபோல்  தொகுதியின் பிரதிநிதியான நீங்கள் தொகுதி மக்களை காக்க வேண்டும் என்று  கோரிக்கை வைக்கின்றனர்,’ அனைவரது கோரிக்கையும் நிறைவேற்றப்பட வேண்டும்,’ என்றார்.

Related Stories:

>