×

வெள்ளநீர் புகாமல் இருக்க நடவடிக்கை: எஸ்.ஆர்.ராஜா உறுதி

தாம்பரம்: தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா தொகுதி முழுவதும் உள்ள பொதுமக்களை நேரில் சென்று சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு வழியெங்கிலும் பொதுமக்கள் மலர்தூவி, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அதன்படி, நேற்று செம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பொதுமக்களிடையே பேசுகையில், ‘திமுக தேர்தல் அறிக்கையில் பொதுமக்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த திட்டங்கள் அனைத்தையும் திமுக ஆட்சி அமைத்தவுடன் தொகுதி மக்களுக்கு பெற்று தருவேன். செம்பாக்கம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எந்தெந்த பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் பராமரிப்பின்றி இருக்கிறதோ அவற்றை சீரமைத்து விளையாட்டு மைதானங்கள் அனைத்தும் பராமரிக்கப்படும்.

டெல்லுஸ் அவென்யூ, வள்ளல் யூசப் நகர், திருமலை நகர் ஆகிய பகுதிகளில் மழை காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நான் வெற்றி பெற்றதும் முதல் பணியாக சம்பந்தப்பட்ட பணிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பேன். எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்,’ என்றார். பிரசாரத்தின்போது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags : SR Raja , Steps to prevent flooding: SR Raja
× RELATED திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து...