இடைத்தேர்தலில் பாஜ வெற்றி பெறும்: அமைச்சர் உறுதி

பெங்களூரு: மாநிலத்தில் நடைபெறவுள்ள மூன்று தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ. வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள் என்று அமைச்சர் ஆனந்த்சிங் தெரிவித்தார். பல்லாரி விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கிவைத்த அமைச்சர் ஆனந்த்சிங் பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:``மாநிலத்தில் ஆளும் கட்சியாக பா.ஜ. இருப்பதால் நடைபெறவுள்ள ஒரு மக்களவை, இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலில் பா.ஜ. வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றிபெறுவார்கள்.

வழக்கமாக ஆளும் கட்சியாக இருக்கும் எந்த கட்சி வேட்பாளர்களும் இடைத்தேர்தலில் தோல்வியடையவதில்லை. அப்படி தோல்வியடைந்திருந்தாலும் அது குறைவு தான். இதனால் இடைத்தேர்தலில் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. பல்லாரி மாநகராட்சி தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது எம்.எல்.ஏ. சோமசேகர்ரெட்டிக்கு விடப்பட்ட விஷயம். அவருக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நகர் தொகுதி எம்.எல்.ஏவாக அவர் இருப்பதால் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பை கட்சி மேலிடம் அவருக்கு வழங்கியுள்ளது என்று நினைக்கிறேன்’’ என்றார்.

Related Stories:

>