டெல்லி பூங்காவில் பா.ஜ நிர்வாகி தற்கொலை

புதுடெல்லி: டெல்லி பூங்காவில் பா.ஜ நிர்வாகி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேற்கு டெல்லி பத்தேக் நகரை சேர்ந்தவர் குர்வீந்தர்சிங்(58). பா.ஜ சட்டத்துறை தலைவராக இருந்தார். ஜீல்வாலா பூங்காவில் இவர் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் போலீசார் அவரது மகன் இஷ்வந்தர்சிங்கை வரவழைத்தனர். அவர் வந்து தனது தந்தையின் உடலைப்பார்த்து அடையாளம் காட்டினார். இதையடுத்து அவரது சடலம் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Related Stories:

>