×

நகரின் முக்கிய பகுதியான சுத்தம், சுகாதாரமின்றி காணப்படும் சுதந்திர பூங்கா

பெங்களூரு:நகரின் முக்கிய சின்னம் மற்றும் சுற்றுலா தலமான சுதந்திர பூங்கா கறை படிந்த சிலைகள் மற்றும் சுகாதாரமின்றி உள்ளது. பெங்களூரு நகரில் முக்கிய சின்னமாக விளங்குவது சுதந்திர பூங்கா. இங்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடைபயணம், விளையாட்டு என தங்களின் இனிமையான நேரங்களை கழித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பலரும் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தும் முக்கிய இடங்களில் சுதந்திர பூங்காவும் ஒன்றாகும். ஒரு காலத்தில் நகரத்தின் மத்திய சிறையாக இருந்தது இந்த இடம் தற்போது நினைவு சின்னமாக மாற்றப்பட்டு கடந்த 2008-ம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.

பொது பயன்பாட்டிற்கு விட்ட போது பூங்கா தூய்மையாக இருந்தது. ஆனால் தற்போது சுதந்திர பூங்கா பரிதாபமான நிலையில் உள்ளது. நுழைவாயிலில் குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள டம்ளர்கள் மற்றும் குழாய்கள் அழுக்கு படிந்து துருப்பிடித்து உள்ளது. கழிவறைகளில் சுகாதாரம் இன்றி உள்ளது. தண்ணீர் பற்றாக்குறையும் உள்ளது. பறவைகளின் எச்சங்கள் நிறைந்து துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ``இங்கு எங்களின் நேரத்தை கழிக்கவும், மன அமைதிக்காகவும் வருவது வழக்கம்.

ஆனால் தற்போது இங்குள்ள அசுத்தமாக நிலை மேலும் மன அழுத்தத்திற்கு எங்களை ஆளாக்குகிறது. சிறைகளினுள் பறவைகளின் கழிவுகள், இறகுகள், இலைகள் என அழுக்கு நிறைந்து காணப்படுகிறது. மணிகூட்டு கோபுரத்தின் நுழைவாயில் வழியாக நாய்கள் உள்ளே நுழைந்து வெளியேறின. நிர்வாக அலுவலகமும் மூடப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் யாரும்  பூங்காவில் இல்லை. மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் பிற அதிகாரிகள் எட்டு முதல் பத்து நாட்களுக்கு ஒரு முறை பூங்காவிற்கு வருகிறார்கள் என தெரிவித்தனர்.

* தூய்மைப்படுத்த அறிவுறுத்தல்
பூங்காவின் மோசமான பராமரிப்பு குறித்து மாநகராட்சியின் தோட்டக்கலை அதிகாரியிடம் கேட்டபோது, ​​புல்வெளிகளையும் தோட்டத்தையும் பராமரிப்பதற்கு தோட்டக்கலைத் துறை மட்டுமே பொறுப்பு என்று பிரகாஷ் கூறினார். சுதந்திர பூங்காவிற்குள் சிலைகள் மற்றும் பிற பகுதிகளை பராமரிப்பது மாநகராட்சி பொறியாளர்களின் வேலை என்றார்.  மாநகராட்சி இணை ஆணையர் (மேற்கு), இந்த பூங்கா தோட்டக்கலை பிரிவினால் பராமரிக்கப்படுகிறது. உடனடியாக துப்புரவு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு நான் அறிவுறுத்துகிறேன் என்றார்.

Tags : Independence Park , The main part of the city is the clean, unhygienic Independence Park
× RELATED ஒன்றிய அரசுக்கு எதிராக கர்நாடக முதல்வர் தலைமையில் போராட்டம்