வடசென்னையில் மீண்டும் தொற்று அதிகரிப்பு..! நகைப்பட்டறை ஊழியர்கள் 22 பேருக்கு கொரோனா: சவுகார்பேட்டையில் பரபரப்பு

சென்னை: சவுகார்பேட்டையில் நகைப்பட்டறை ஊழியர்கள் 22 பேர், கொரோனா தொற்று காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை சவுகார்பேட்டையில்  வடமாநிலத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான நகைப்பட்டறை உள்ளது. இங்கு மேற்குவங்கத்தை சேர்ந்த 54 பேர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை மாநகராட்சி 5வது மண்டல சுகாதார அதிகாரி மாப்பிள்ளை துரை தலைமையிலான குழுவினர், நகைப்பட்டறை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.

இதில், 22 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 22 பேரும் தண்டையார்பேட்டையில் உள்ள காலரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 32 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்காலிகமாக இந்த நகைப்பட்டறை மூடப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியில் உள்ள கம்பெனி ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>