தேர்தல் விளம்பரத்தில் தனது படம்: பாஜவுக்கு கார்த்தி சிதம்பரம் மனைவி கண்டனம்

சென்னை பாஜ விளம்பரத்தில் தனது படத்தை பாஜ பயன்படுத்தியதற்கு கார்த்தி சிதம்பரம் மனைவி நிதி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது. அரசியல் கட்சிகள் நேரடியாக மட்டும் இல்லாமல் சமூக ஊடகங்கள் மூலமாகவும் தேர்தல் பிரசாரங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

இந்தநிலையில், தமிழக பாஜ சார்பில் அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ‘தாமரை மலரட்டும், தமிழகம் வளரட்டும், வாக்களிப்பீர்...தாமரைக்கே’ என்று வாசகம் எழுதி அதன் கீழ் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் மனைவி நிதியின் படத்தை பயன்படுத்தி இருந்தது. தமிழக பாஜவின் இந்த டிவிட்டர் பதிவு இணையதளங்களில் வேகமாக பரவி வந்தது.

இந்தநிலையில், நேற்று நிதி தமிழக பாஜவின் இந்த பதிவிற்கு பதிலளித்து டிவிட்டர் பதிவை வெளியிட்டிருதார். அதில், ‘பாஜ தேர்தல் விளம்பரத்திற்காக தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் தாமரை என்றும் மலராது’ என பதில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>