அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக போட்டி: திருவள்ளூர் உள்பட 2 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நீக்கம்

சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக போட்டியிடும் திருவள்ளூர், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டமன்ற பொதுத்தேர்தலில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மற்றும் கூட்டணி வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுகிற காரணத்தாலும், திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த ஆர்.லட்சுமி, திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நெல்லை கு.சடகோபன் ஆகியோர் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

அதிமுகவினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories:

>