புதுசா இருக்கே இது எந்த கொடி...? பிஜேபிக்கு வந்த சோதனை

மாங்கனி மண்டலத்தில் மலை கிராமங்கள் அதிகம். இதுவரை அந்த கிராமங்களுக்கு மறந்து கூட போகாத இலை கட்சி கூட்டணி, இப்போது போக ஆரம்பிச்சிருக்காங்களாம். அப்படி போறவங்களை இத்தனை வருஷமா ஏன் நீங்க இங்க வரல? இப்ப மட்டும் ஏன் வந்தீங்கன்னு மலைவாழ் மக்கள் துளைச்சு எடுக்கிறாங்களாம். இது எல்லாத்தையும் விட மக்கள் கேட்கும் மற்றொரு கேள்வி தான் இலையின் கூட்டணியை சங்கடப்படுத்துதாம். வாக்கு சேகரிக்க செல்லும் போது அவர்கள் கூட்டணி கட்சிகளின் கொடிகளையும் எடுத்துட்டு போறாங்களாம்.

இதில் இலை, மாம்பழ கட்சிகளின் கொடிகளை அடையாளம் கண்டு கொள்ளும் மக்கள், இது எந்த கட்சி கொடி, புதுசா இருக்கே? என்று ேகட்கிறாங்களாம். இது தாங்க எங்க இரண்டு கட்சியையும் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் தாமரையின் கொடி என்பது அவங்களுக்கு தெரியலியே என்று ஆதங்கப்படுகிறார்களாம் கூட்டணி தொண்டர்கள். மலரும், மலரும் என்று சொல்றவங்க முதலில் இது  போன்ற மலை கிராமங்களில் ஒரு கொடியையாவது மலரவிட வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் மைன்ட் வாய்ஸ்.

Related Stories:

>