×

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி: திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பரிசோதனையை அதிகரிக்க முடிவு: தமிழக அரசு தகவல்.!!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட அறிக்கையில்,  இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் சூழல் காணப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இந்த தொற்று அதிவேகமாகவும், பன்மடங்கும் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், அதே வேளையில் பஞ்சாப், சதிஷ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், டெல்லி, அரியானா போன்ற மாநிலங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டிலும் நாள் ஒன்றுக்கு நோய்த் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலைக் கருத்தில்கொண்டு,

இந்த நோயைப் பரவாமல் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பன்முக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   ஏற்கனவே முனைவர். ராஜீவ் ரஞ்சன், தலைமைச் செயலாளர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் இந்த நிலையை ஆய்வு செய்த பின்பும் மருத்துவ வல்லுநர் குழுவுடனும் நடந்த கூட்டத்திற்கு பின்பும் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, கீழ்கண்டவாறு பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டுள்ளது.  

* கல்வி நிலையங்கள், கல்லூரிகள் மற்றும் விடுதிகள் உட்பட 9, 10 மற்றும் 11-ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை மூடவும், இணையவழி வகுப்புகள் மட்டும் நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.  பொறியியல், விவசாயம், கால்நடை, சட்டம் மற்றும் இதர படிப்புகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் தவிர, மற்ற மாணவர்கள் அனைவருக்கும் இணைய வழி வகுப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.  இதேபோல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவம் மற்றும் முதுநிலை மருத்துவம் சார்ந்த படிப்புகள் படிக்கும் மாணவர்கள் தவிர, மற்ற மாணவர்கள் அனைவருக்கும் இணையவழி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* நிகழ்ச்சிகள் நடைபெறும் உள்ளரங்குகளின் மொத்த இருக்கைகளில் 50 விழுக்காடு இடங்களுக்கு மிகாமல் அல்லது அதிகபட்சமாக 600 நபர்களுக்கு மிகாமல் நிலையான வழிமுறை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடித்து நிகழ்ச்சிகள் நடப்பது கண்காணிக்க வலியுறுத்தப்பட்டது.

* பொது இடங்கள் மற்றும் கூட்டங்களில் முகக்கவசம் அணிவது கைகளை கழுவுவது , சமுக இடைவெளி பின்பற்றுவது போன்ற கோவிட் தடுப்பு சார்ந்த பழக்கங்கள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க வலியுறுத்தப்பட்டது.  மீறுவோர் மீது பொது சுகாதாரச் சட்டம் 1939 மற்றும் இச்சட்டத்தின் கீழ் அவ்வப்போது வெளியிடப்படும் திருத்தங்களில் வகுக்கப்பட்டுள்ள தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

* மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல், நாளொன்றுக்கு சராசரியாக செய்யப்படும் மாதிரி பரிசோதனைகள் 52,000 என்ற எண்ணிக்கையிலிருந்து, 85,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  80 விழுக்காட்டிற்கும் அதிகமான பரிசோதனைகள் 69 அரசு மருத்துவமனைகளில் உள்ள ஆய்வகங்களிலும், மற்றவை 190 தனியார் ஆய்வகங்களிலும் பரிசோதனை செய்யப்படுகின்றன.

* தொற்று உறுதி செய்யப்பட்டவர்களோடு தொடர்பில் இருப்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கும், நோய்த் தொற்று அதிகம் உள்ள பகுதிகளிலும் பரிசோதனைகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தலைமைச் செயலாளரின் 23.03.2021 அன்று வெளியிட்ட அறிக்கையில் அறிவித்தவாறு கோவிட் நோய் பரவலை ஆராய்ந்து இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மூத்த செயலர்கள் உள்ளடங்கிய கோர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.  

அக்குழு இன்று (30.03.2021) தலைமைச் செயலாளர் முன்பு தற்பொழுதுள்ள நிலை குறித்த விவரங்களை விளக்கக்காட்சி மூலம் சமர்ப்பித்தது.  இந்தக் கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித் துறை, கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, முதன்மைச் செயலாளர், பொதுத் துறை, முதன்மைச் செயலாளர், பொதுப்பணித் துறை, முதன்மைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், இணைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு, மாநில தடுப்பூசி அலுவலர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் தற்போதுள்ள நிலைமை பற்றிய விவரங்களை விரிவாக சமர்ப்பித்தார். அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள், கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் போன்ற மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி போன்ற மாவட்டங்களில் நோய்த் தொற்று நாள் ஒன்றுக்கு வார சராசரியை விட கூடுதலாக பதிவாகிறது.  குறிப்பாக, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து பரவிய நோய்த் தொற்று, திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் ஆலயங்கள், கலாச்சாரம் நிகழ்ச்சிகளைச் சார்ந்த கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு நோய் தொற்றும், சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பயிற்சி நிலையங்கள், குடும்ப கலாச்சார மற்றும்

 இதர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு வீடுகளில் ஏற்படக்கூடிய நோய் தொற்று, கோயம்புத்தூர், திருப்பூர் நகர்புறங்களில் பணியிடங்களில் ஏற்பட்டு மற்றவர்களுக்கு நோய் தொற்று பரவுவது முக்கிய காரணமாக தெரிய வருகிறது.  பல இடங்களில் ஏற்கனவே வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மைத் துறையால் வகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (ளுடீஞ) பின்பற்றாததும் முக்கியமான காரணமாக தெரிகிறது.  இதைத் தவிர, கூட்டம் நடக்கும் பல இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாதது ஒரு முக்கிய காரணமாகும்.  மார்ச் 16-ஆம் தேதி முதல் இதுவரை 98,681 நபர்களிடம் 2.09 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்ட போதிலும், கூடுதல் எண்ணிக்கை பதிவாகும் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் கவனம் செலுத்தி செயல்படுத்த வேண்டியது பற்றி விவாதிக்கப்பட்டது.

தற்போது கிராமப் பகுதிகளில் ஒரு தெருவில் 3 அல்லது 3-க்கும் மேற்பட்ட  தொற்று பதிவானால் அந்த தெருவும்,  நகர்புறங்களில் ஒரு குடியிருப்பில் 3 அல்லது 3-க்கும் மேற்பட்ட தொற்று ஏற்பட்டால், அந்த குடியிருப்பு பகுதியும் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது.  இதுவரை 553 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் கண்டறியப்பட்டு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  

இக்கூட்டத்தில் கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

பரிசோதனைகளை மேலும் தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டது. குறிப்பாக,  இப்பரிசோதனை குறைவாக காணப்படும் சில நகரங்களிலும் மற்றும் சில மாவட்டங்கள் ஆகியவற்றில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எடுக்கவேண்டும்.  குறிப்பாக, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டது.  

மேலும், இதர மாவட்டங்களைப் பொறுத்தவரை, ஏற்கனவே கணிசமான சுகூ-ஞஊசு பரிசோதனைகள் உயர்த்திய பின்பும் நோய்த் தொற்று அதிகமான எண்ணிக்கை பதிவாகும் மாவட்டங்களான சென்னை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருவாரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்னும் கூடுதலாக பரிசோதனைகள் அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டது. இதன் மூலமாக, நோய் உள்ளவர்களுடன் தொடர்பில் உள்ள அனைவருக்கும்  மற்றும் நோய் அறிகுறி காணப்படுபவர்களுக்கும்கட்டாயம் பரிசோதனை செய்வதை  செய்ய மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.  

இவ்வாறு செய்தால் குறுகிய காலத்தில் கோவிட் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் பொது சுகாதார வல்லுநர்களின் கருத்தின்படி, இந்த வழிகாட்டுதலை பின்பற்றுவதினால் உறுதி செய்யப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இந்த முறை வழிவகுக்கிறது எனவும் இதனால் இவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க இது ஏதுவாக அமையும். நோய் தொற்று ஏற்பட்டவர்கள் மற்றும் அவர்களோடு உடனிருப்பவர்கள் கண்டறியப்பட்டு, தொற்று உள்ளவர்களை தனிமைபடுத்தி (ஐளடிடயவவீடிஸீ) அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும்.
 
தலைமைச் செயலாளர் அவர்களால், மாவட்ட அளவிலான இறப்புகளும், மருத்துவ நிலையங்களில் ஏற்படும் இறப்புகளும் ஆய்வு செய்யப்பட்டது.  கடந்த 7 நாட்களாக, சராசரியாக சென்னையில் ஏற்படும் இறப்பு விகிதம் 0.6 விழுக்காடாகவும், செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் முறையே 0.8 மற்றும் 0.5 விழுக்காடாகவும், மற்ற மாவட்டங்களில் 0.6 முதல் 0.1 விழுக்காடுக்கும் குறைவாக உள்ளது.  இறப்பு விகிதம் மட்டுமல்லாமல் இறப்பின் எண்ணிக்கையையும் குறைப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்றும் இதனை மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் கண்காணிக்கவேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதற்கு முன் இயங்கி வந்த கோவிட் மையங்களை முழுமையாக மீண்டும் செயல்பட வைக்கவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

தற்போது மருத்துவம், முன்களப் பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அனைவருக்கும் வயது வரம்பு இன்றியும், 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மற்றும் 45 வயதிலிருந்து 59 வயதுவரை உள்ள இணை நோய் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.   மத்திய அரசு 01.04.2021 முதல் 45 வயதிலிருந்து 59 வயதுக்குட்பட்ட இணை நோய் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி போடலாம் என மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளது.  எனவே, தமிழ்நாட்டில் 01.04.2021 முதல் 45 வயதிலிருந்த 59 வயதுக்குட்பட்ட இணை நோய் இல்லாதவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

 தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவரும் அடுத்த சில நாட்களில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வதை மாவட்ட ஆட்சியர்களும் சென்னை மாநகராட்சி ஆணையரும் உறுதி செய்ய வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது.மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் கோவிட் தொற்றின் அளவு பலமடங்கு உயர்ந்தும், நமது மாநிலத்திலும் மற்றும் நமது அண்டை மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் நோய்த் தொற்று உயர்ந்து வரும் நிலையில், இது குறித்த அனைத்து சூழ்நிலைகளையும் கவனமாக அரசால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.  

இதன் அடிப்படையில், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இக்குழுக் கூட்டத்தில் முழுமையாக விவாதிக்கப்பட்டது.  இந்த காலகட்டத்தில், திருவிழாக்கள் மற்றும் தேர்தல் பிரச்சாரங்கள் அதிகமாக நடைபெற்று வருவதை கருதும் போது, நோய் தொற்று தடுப்பு விதிமுறைகளை முழுமையாக பின்பற்றுவது மிகவும் அவசியமானதாகிறது.  எனவே, அனைத்து நிகழ்ச்சிகள், மதத் திருவிழாக்கள் மற்றும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் மேற்கூறிய வழிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இக்குழு வலியுறுத்தி நோயின் பரவல் தன்மையை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்றும், இதனை கருத்தில் கொண்டு அனைவருக்கும் கோவிட் தடுப்பு சார்ந்த பழக்கங்களான முகக்கவசம் அணிவது, கைகளை கழுவுவது , சமூக இடைவெளி போன்றவற்றை கண்டிப்பாக பின்பற்றுவதை அனைவரும் உறுதி செய்யவேண்டும் என்று முறையீட்டையும்  வைத்தது.  

இந்நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை அனுமதி பெற்று நடத்துவோர் , இதனைப் பின்பற்றுவதற்காக பொறுப்பேற்க வேண்டும் எனவும், முகக்கவசம் அணிதல் மற்றும் கோவிட் தடுப்பு சார்ந்த பழக்கங்களை கடைபிடிக்கப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Tiruchi , Echo of the increase in corona damage: Decision to increase testing in 8 districts including Trichy: Government of Tamil Nadu information. !!
× RELATED திருச்சி துவாக்குடி கனரா வங்கியில்...