×

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள 10 மாவட்டங்களில் 8 மாவட்டங்கள் மராட்டியத்தை சேர்ந்தவை: மத்திய அரசு தகவல்

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள 10 மாவட்டங்களில் 8 மாவட்டங்கள் மராட்டியத்தை சேர்ந்தவை என சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமெடுத்துள்ளது. கடந்த 20 நாளாக தொடர்ந்து தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 20 லட்சத்து 39,644 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் 1 லட்சத்து 61,843 ஆக உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து 5 லட்சத்தை தாண்டி உள்ளது.

மொத்தம் 5 லட்சத்து 21,808 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கையும் விரைவுபடுத்தபட்டு வருகிறது. இதுவரை 6 கோடியே 5 லட்சத்து 30,435 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இந்நிலையில் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; கடந்த பிப்ரவரி மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள 10 மாவட்டங்களில் 8 மாவட்டங்கள் மராட்டியத்தை சேர்ந்தவை. மும்பை, புனே, நாக்பூர், நாசிக், டெல்லி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கொரோனா அதிகம் உள்ளது. கொரோனா பரவலின் வாராந்திர தேசிய சராசரி 5.65% ஆக உள்ளது. மகாராஷ்ட்ரா-23%, பஞ்சாப்-8.82%, சத்தீஸ்கர்-8%, மத்திய பிரதேசம்-7.82%, தமிழகம் -2.5% ஆகா உள்ளது. மேலும் கர்நாடகா-2.45%, குஜராத்-2.2%, டெல்லி-2.04%, என்ற அளவில் கொரோனா கொரோனா தொற்று உள்ளது.

இதுவரை 807 பேருக்கு பிரிட்டன் வகை கொரோனாவும், 47 பேருக்கு தென்னாப்பிரிக்க வகை கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.


Tags : Eight out of 10 districts across the country where corona exposure has increased are Maratha: Federal Information
× RELATED பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை...