×

13பேர் சாவுக்கு நீதி கிடைத்திட திமுகவுக்கு வாக்களியுங்கள்-கீதாஜீவன் பேச்சு

தூத்துக்குடி : தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கிடைத்திட தி.மு.க.விற்கு வாக்களியுங்கள் என தி.மு.க. வேட்பாளர் கீதா ஜீவன் எம்.எல்.ஏ., கேட்டுக்கொண்டார்.மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கீதாஜீவன் மறக்குடி தெருவில் பிரசாரத்தை துவக்கி மட்டக்கடை, வாடிதெரு, செயின்ட் பீட்டர் கோவில் தெரு, பெரியக்கடைத் தெரு, மாதா கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடமும் வியாபாரிகளிடமும் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், கடந்த 5 ஆண்டு காலமாக மாநகராட்சி தேர்தல் நடைபெறவில்லை. உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படாததால் மக்களுக்கான அடிப்படை பணிகளை முழுமையாக செய்ய முடியவில்லை. மேலும், மாநகராட்சியில் குப்பை வரி, சொத்துவரி என அனைத்தையும் உயர்த்தி விட்டனர். இந்த நிலை மாற வேண்டும். திமுக ஆட்சி அமைந்ததும், உள்ளாட்சி தேர்தல் முழுமையாக நடத்தப்பட்டு, அனைத்துப்பணிகளும் நிறைவேற்றப்படும். 13 பேரை சுட்டுக்கொன்றது தான் தூத்துக்குடிக்கு அதிமுக ஆட்சியில் செய்த சாதனை.

13 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தவறு செய்த குற்றவாளிகள் யார் என்று இன்று வரை அடையாளம் காட்டப்படாமல் இருக்கின்றனர். இதற்கு நீதி கிடைத்திட தமிழகத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.

தொடர்ந்து நேற்று காலை தூத்துக்குடி தருவை மைதானம், ரோச் பூங்கா பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் தி.மு.க. தேர்தல் அறிக்கையை வழங்கி கீதா ஜீவன் வாக்கு சேகரித்தார்.இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, செயலாளர் ஆனந்தசேகரன், பொருளாளர் அனந்தையா, மாவட்ட அணி நிர்வாகிகள் மோகன்தாஸ் சாமுவேல், அந்தோணி ஸ்டாலின், ரமேஷ், அன்பழகன், துணை அமைப்பாளர்கள் சேசையா, அகஸ்டின், ஆர்தர் மச்சாது, பகுதிச் செயலாளர்கள் நிர்மல்ராஜ், ராமகிருஷ்ணன், மாநகர அணி அமைப்பாளர்கள் ஆனந்த கேப்ரியேல்ராஜ், முருகஇசக்கி, அருண்குமார், கிறிஸ்டோபர் விஜயராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், கதிரேசன், தொமுச முருகன், மரியதாஸ், வட்டச் செயலாளர்கள் டென்சிங், ஹாட்லி, காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், முன்னாள் மாவட்ட தலைவர் அருள், முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி, மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, நிர்வாகிகள் பேச்சிராஜ், தர்மம், மகாராஜன், தொம்மை, பொன்ராஜ்,  விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலளார் அகம்மதுஇக்பால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஞானசேகர், துணைச்செயலாளர் மாடசாமி, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ராஜா, கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் உடன் சென்றனர். மறக்குடி தெருவில் பிரச்சாரம் செய்த வேட்பாளர் கீதா ஜீவனுக்கு மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது தலைமையில் வீரவாள் வழங்கப்பட்டது.

Tags : DMK ,Geethajivan , Thoothukudi: Vote for DMK to get justice for the incident in which 13 people were shot dead in Thoothukudi. Candidate
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி