விருதுநகரில் டூவீலர் நிறுத்துமிடமாக மாறிய காமராஜர் நினைவு இல்லம்

விருதுநகர் : விருதுநகர் சுலோச்சனா தெருவில் காமராஜர் நினைவு இல்லம், அரசின் செய்தித்துறை மக்கள் தொடர்புத்துறை பராமரிப்பில் உள்ளது. காமராஜர் வாழ்ந்த இல்லத்தில் அவரின் எளிய வாழ்க்கையை பறைசாற்றும் வகையில் புகைப்படங்கள், அவரின் ஆடைகள், பயன்படுத்திய பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் இருந்து தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் காமராஜர் நினைவு இல்லம் வந்து செல்கின்றனர்.காமராஜர் நினைவு இல்லம் குடியிருப்புகளுக்கு அருகில் இருக்கும் வீடுகளில் வசிப்போர், தங்களது டூவீலர், சைக்கிள்களை நினைவு இல்லம் முன் நிறுத்தி வைக்கின்றனர். அத்துடன் குடியிருப்புவாசிகளின் வாகனங்களை அவர்களின் வீடுகளில் நிறுத்தாமல் காமராஜர் நினைவு இல்லம் முன்பகுதியில் நிறுத்துவதால், காமராஜர் இல்லத்திற்கு கூட்டமாக வரும் மக்கள் உள்ளே செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

காமராஜர் நினைவு இல்லம் திறந்திருந்கும் காலநேரத்தை வெளிப்பகுதியில் பதிவிட வேண்டும். தண்ணீருக்கான ஆதாரம் இல்லாத நிலையில், நினைவு இல்லம் முன்பாக ரூ.3.50 லட்சம் நிறுவி செயல்படாமல் பெரும் பகுதி இடத்தை ஆக்கிரமித்து இருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை அகற்றி, நகராட்சியில் நிறுவி செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெற்றிவேந்தன் கூறுகையில், ``காமராஜர் நினைவு இல்லம் முன்பாக, குடியிருப்புவாசிகள் வாகனங்களை நிறுத்தி செல்வது தடை செய்யப்படும். பார்வையாளர்கள் வந்து செல்வதில் உள்ள இடையூறுகள் சரி செய்யப்படும்’’ என்றார்.

Related Stories:

>