×

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைதி நிலவ இருநாடுகள் மேற்கொண்ட முயற்சி மகிழ்ச்சி அளிக்கிறது!: சீனா வரவேற்பு

பெய்ஜிங்: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைதி நிலவ இருநாடுகள் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தானின் நடவடிக்கை மகிழ்ச்சி அளிப்பதாக சீன வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 2003ம்ஆண்டில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பிறகு பல்வேறு கால கட்டங்களில் சண்டை நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடுகள் எட்டப்பட்டன. ஆனால் ஒப்பந்தம், உடன்பாடுகளை பாகிஸ்தான் மதிக்கவில்லை.

காஷ்மீர் எல்லையில் அந்த நாட்டு ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதுபோன்று பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதையடுத்து, சீனா பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடு என்று அந்நாட்டு அதிபர் ஆரிப் அலி கூறியிருந்த நிலையில், அண்மையில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைதி நிலவ போர் நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் கடைபிடிக்க உறுதி எடுத்து இரு நாடுகளும் கடந்த பிப்ரவரி மாதம் கூட்டறிக்கை வெளியிட்டன. பிப்ரவரி 24ம் தேதி நள்ளிரவு முதல் இந்த உடன்பாடு அமலுக்கு வந்தது. இந்த உடன்படிக்கைக்கு பிறகு, துப்பாக்கி சத்தம் ஓய்ந்து எல்லையில் அமைதி நிலவுவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவத்தின் அமைதி நடவடிக்கைக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான நேர்மறையான நடவடிக்கைகளால் சீனா மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், இரு நாடுகளின் அமைதி முயற்சி வரவேற்கத்தக்கது என்றும் கூறியுள்ளார். தெற்காசிய மண்டலத்தில் அமைதி நிலவ முயற்சித்து வரும் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் என்றும் சீனா அறிவித்துள்ளது.


Tags : China ,India ,Pakistan , India - Pakistan border, peace, happiness, China
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...