×

காவலர் குடியிருப்பு அமைத்து கொடுத்தது கலைஞர் ஆட்சி-அர.சக்கரபாணி எம்எல்ஏ பேச்சு

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட பொன்னகரம், ஆத்தூர், குறிச்சிநகர், பழனிக்கவுண்டன்புதூர், ஏ.பி.பி.நகர், நாயக்கனூர், தும்மிச்சம்பட்டிபுதூர், துல்கருணை சிக்கந்தர் நகர், கருவூலக் காலனி, அண்ணாநகர், சொசைட்டி காலனி, காவலர் குடியிருப்பு உள்ளிட்ட நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் அர.சக்கரபாணி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: கடந்த திமுக ஆட்சியில் ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, சத்திரப்பட்டி, இடையகோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் காவலர் குடியிருப்பு அமைத்துக்கொடுக்கப்பட்டது. ஒட்டன்சத்திரம் வேளாண் விற்பனைக் கூடம், மின் மயானம், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தியது, பஸ்நிலையத்தை விரிவுபடுத்தியது, குறிஞ்சிநகர் உருவாக்கியது, தீயணைப்பு நிலையம் ஏற்படுத்தியது, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் கொண்டு வரப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி அமைந்தவுடன் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படும், பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகை ரூ.60 ஆயிரமும், 8 கிராம் தங்கமும் வழங்கப்படும், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், மருத்துவக் கல்லூரியின் கூடிய உயர்தர மருத்துவமனை அமைத்து தரப்படும் என்று பேசினார்.

நிகழ்வில் நகர செயலாளர் ப.வெள்ளைச்சாமி, மாவட்ட அவைத்தலைவர் மோகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன், ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags : Ara Chakrabarty , Ottansathram: Ottansathram Assembly Constituency Ottansathram Municipality Ponnagaram, Attur, Kurichinagar,
× RELATED விவசாயிகள் மின் மோட்டார் வாங்க ரூ.10...