×

வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு தற்காலிகமானது; கூடுவதற்கும் குறைவதற்கும் வாய்ப்புள்ளது : பல்டி அடித்த ஓபிஎஸ்

சென்னை : வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தற்காலிகமானது என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு அளிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றினார். இந்த தீர்மானத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்த நிலையில் வன்னியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி உண்டானது.

இந்நிலையில் தேர்தல் வியூகம் குறித்து ஆங்கில நாளிதழுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் அளித்த பேட்டியில், தமிழகத்தில் எம்பிசிக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு அளித்திருப்பது இடைக்கால ஏற்பாடுதான். சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட்ட பிறகு வன்னியர் இட ஒதுக்கீடு இறுதியாகும்.சாதிவாரி கணக்கெடுப்பு குழு தரும் அறிக்கை அடிப்படையில் வன்னியர் இட ஒதுக்கீடு கூடுவதற்கும் குறைவதற்கும் வாய்ப்புள்ளது.

சீர் மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களில் இதர பிரிவினருக்கு தரப்பட்டுள்ள உள் ஒதுக்கீடு அனைத்தும் தற்காலிகமானது தான்.எதிர்காலத்தில் அதிமுகவில் யார் வேண்டுமானாலும் எந்தப் பதவிக்கும் வரலாம். சசிகலா, தினகரன் இருவரும் முன்பு அதிமுகவில் இருந்தவர்கள்தான். ஜனநாயக முறையில் செயல்படும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற ஏற்பாடு தற்போது உள்ளது.ஆட்சியில் முதல்வரும் துணை முதல்வரும் நிர்வாகத்தை கவனித்து வருகின்றனர்.ஒரு குடும்பத்தின் ஆதிக்கமோ தனி ஒரு நபரின் ஆதிக்கமோ அதிமுகவில் இல்லை.   ” என்றார்.


Tags : Baldi , முதல்வர் எடப்பாடி பழனிசாமி
× RELATED அது வேற வாய்.. இது வேற வாய்.. மோடி அலை...