×

புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் பிரமுகரும், தொழிலதிபருமான புவனேஸ்வரன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் பிரமுகரும், தொழிலதிபருமான புவனேஸ்வரன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். புவனேஸ்வரன் இல்லம், அவரது உறவினர் வீடு உள்பட 3 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். புதுச்சேரியில் பிரதமர் மோடி இன்று பரப்புரை மேற்கொள்ளும் நிலையில், கூட்டணி கட்சியான என்.ஆர் காங்கிரஸை சேர்ந்த புவனேஸ்வரன் வீட்டில் ஐ.டி ரெய்டு நடத்துகின்றனர்.

என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரெங்கசாமியின் தீவிர ஆதரவாளர் புவனா என்ற புவனேஸ்வரன். இவர் கடந்த காமராஜர் நகர் இடைத்தேர்தலில் கூட போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் இன்று அவருடைய வீடு மற்றும் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் 6 பிரிவுகளாக பிரிந்து தற்போது சோதனை நடத்தி வருகிறார்கள். விமான நிலையம் செல்லக்கூடிய சாலையில் புவனாவினுடைய வீடு இருக்கிறது. அந்த பகுதியிலேயே தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது சோதனையிட்டு கொண்டிருக்கிறார்கள். முதற்கட்ட விசாரணையில் அங்கு எதும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.

இருந்தபோதிலும் அவருடைய உறவினர் வீடுகளில் முழுவதுமாக சோதனையிட இருக்கிறார்கள். பிரதமர் மோடி பரப்புரை செய்வதற்காக இன்று மாலை புதுச்சேரி வர இருக்கிறார். இந்த நிலையில் வருமான வரித்துறை சோதனை என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தேசிய ஜனநாயக கூட்டணியினுடைய தலைமை பொறுப்பை வகிக்கக்கூடியவர் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரெங்கசாமி. அவருடைய மிக நெருங்கிய நண்பரும் தீவிர ஆதரவாளருமான இவருடைய வீட்டில் நடைபெற கூடிய வருமான வரித்துறை சோதனை என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Tags : Congress ,Bhuneswaran , Puducherry
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...