×

ராணுவ ஆட்சியால் தவிக்கும் மியான்மர் மக்கள் : ராணுவம் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 500ஐ தாண்டியது..!!

யாங்கூன்: மியான்மரில் ராணுவத்தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500ஐ தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ஆட்சியை கடந்த பிப்ரவரி 1ம் தேதி புரட்சியின் மூலம் கவிழ்த்து விட்டு, ராணுவம் ஆட்சியை பிடித்தது. சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை விடுதலை செய்யக் கோரியும், ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் மியான்மர் மக்கள் போராட்த்தில் நடத்தி வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் மீது ராணுவம் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இந்நிலையில், பத்துக்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த வழக்கம் போல் ராணுவத்தினரும், போலீசாரும் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இதில், 114 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 114 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா  உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 12 நாடுகளின் ராணுவ தலைவர்கள் இணைந்து மியான்மர் ராணுவத்துக்கு எதிராக கண்டன அறிக்கையை வெளியிட்டார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1ந்தேதியில் இருந்து போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 510 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இது உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மியான்மரின் வடக்கு கரேன் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள், ஒரு குழுவாக ஆயுதம் ஏந்தி, ராணுவத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து மியான்மர் ராணுவம், கரேன் மாவட்டத்தில் பழங்குடியின மக்களை குறிவைத்து, விமானங்கள் வாயிலாக வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து, கரேன் பழங்குடியின மக்கள் அண்டை நாடான தாய்லாந்துக்குள் அடைக்கலம் புகுந்து வருகின்றனர்.

Tags : Myanmar , Military rule, Myanmar, people
× RELATED அதிக தேர்தல் பத்திரங்கள் வாங்கிய...