×

'அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய வந்துள்ள துப்புரவு தொழிலாளர்கள் நாங்கள்' - கமல்ஹாசன் பேச்சு

சென்னை: அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய வந்துள்ள துப்புரவு தொழிலாளர்கள் நாங்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டபேரவை தேர்தல் வருகிற 6ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதே நேரத்தில் தேர்தல் பிரசாரம் வருகிற 4ம் தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. தேர்தல் நெருங்கி வரும் அதே வேளையில் அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் வேளச்சேரி தொகுதி வேட்பாளர் சந்தோஷ் பாபுவை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்; மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபு. என்னை 5 வயதில் இருந்தே தமிழக மக்கள் தோலில் தூக்கி வளர்த்திருக்கிறார்கள். நம்மை பார்த்து பயந்த காரணத்தால் எதிர்க்கட்சியினர் தொந்தரவு தருகின்றனர். இப்போதைய அரசியல்வாதிகள் மக்கள் பணத்தை கொள்ளையடித்து சுவிஸ் வங்கியில் போட்டுள்ளனர். அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய வந்துள்ள துப்புரவு தொழிலாளர்கள் நாங்கள்; இன்றே சுத்தம் செய்யவில்லை என்றால் நாளைய தலைமுறை எங்களை திட்டும்.

நான் ஹெலிகாப்டர்களில் செல்வதை கேலி செய்கிறார்கள்; அடுத்த முறை அவர்களுக்கும் அது தேவைப்படும் என கூறினார்.


Tags : Kamalhassan , 'We are the cleaners who have come to clean the political sewer' - Kamal Haasan speech
× RELATED 5 நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர்...