×

மோடியே திரும்பி போ.. தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி... வழக்கம் போல #GoBackModi ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட்!!

சென்னை : தமிழகம் வரும் மோடிக்கு டிவிட்டரில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வழக்கம் போல #GoBackModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றது.அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய டெல்லியில் இருந்து தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.அந்த வகையில் தாராபுரத்தில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் முருகனை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் செய்கிறார்.

பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகி விடும். இன்று அதிகாலை முதலே கோ பேக் மோடி ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரண்ட் ஆகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கறுப்புக் கொடி காட்ட முடிவு எடுத்துள்ளனர். ஆனாலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க பாஜகவினர் தயாராகி வருகின்றனர்.



Tags : Modiy ,PM Modi ,Tamil Nadu Trent , பிரதமர் மோடி
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...