உக்கிரத்தில் கொரோனா: அமெரிக்காவிலும், இந்தியாவிலும் நிலைமை மோசம்.. பிரேசிலில் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!!

ஜெனீவா :  உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.82- கோடியாக உயர்ந்துள்ளது.சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், இன்னமும் கட்டுடங்காமல் பரவி வருகிறது.  தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.  எனினும்,  2-வது, 3-வது அலைகளாக பரவும் கொரோனா கடுமையான பாதிப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.82- கோடியாக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 லட்சத்து 03 ஆயிரத்து 968-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியே 34 லட்சத்து 30 ஆயிரத்து 443- ஆக உள்ளது.  வைரஸ் பரவியவர்களில் 2.19 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 94,600-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 2-ஆம் இடத்திலும்  இந்தியா 3-ஆம் இடத்திலும் உள்ளன.

அமெரிக்காவில் 56,282 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 629 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

பிரேசிலில் ஒரே நாளில் 42,666 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,969 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 56,119 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 266 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 542,353 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.

இங்கிலாந்தில் 4,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவுக்கு மேலும் 23 பேர் பலியாகியுள்ளனர்

Related Stories:

>