மயாமி ஓபன் டென்னிஸ் முகுருசா முன்னேற்றம்

மயாமி: அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசா தகுதி பெற்றார். மூன்றாவது சுற்றில் ரஷ்யாவின் அன்னா களின்ஸ்கயாவுடன் நேற்று மோதிய முகுருசா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 2 மணி, 41 நிமிடம் போராடி வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு 3வது சுற்றில் களமிறங்கிய கரோலினா பிளிஸ்கோவா (செக்., 6வது ரேங்க்) 1-6, 6-4, 4-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவிடம் (29வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வியடைந்தார். முன்னணி வீராங்கனைகள் நவோமி ஒசாகா (ஜப்பான்), பியான்கா ஆண்ட்ரீஸ்கு (கனடா), எலிஸ் மெர்டன்ஸ் (பெல்ஜியம்), மரியா சக்கரி (கிரீஸ்) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

Related Stories:

>